பெங்களூரு அருகே கன்டெய்னர் லாரி மீது மயிலாடுதுறை ரயில் மோதி விபத்து

சென்னை: மைசூருவில் இருந்து பெங்களூரு வழியாக மயிலாடுதுறைக்கு பயணிகள் ரயில் தினந்தோறும் இயக்கப்படுகிறது. நேற்று இரவு மைசூருவில் இருந்து பெங்களூரு வழியாக மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனேக்கல் தாலுகா ஆவலஹள்ளி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கன்டெய்னர் லாரி கடக்க முயன்றது. அப்போது, லாரியின் சக்கரம் தண்டவாளத்தில் சிக்கி கொண்டது. அப்போது, அந்த வழியாக மயிலாடுதுறை பயணிகள் ரயில் வந்தது. இதை பார்த்த டிரைவர் உயிர் பிழைத்தால் போதும் என்று இறங்கி தப்பி ஓடினார். வேகமாக வந்த ரயில் கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், லாரி அப்பளம் போல் நொறுங்கியது. அங்கிருந்த மின்கம்பமும் சேதமடைந்தது. ரயில் சக்கரத்தில் லாரி சிக்கியதால், மேற்கொண்டு ரயில் செல்லமுடியாமல் அந்த இடத்திலேயே நின்றது. விபத்து காரணமாக அவ்வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.  இந்த விபத்தில் உயிரிழப்பு  ஏற்படவில்லை.

Related Stories: