தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களில் மட்டும் அக்டோபர் 2ம் தேதி கிராமசபை கூட்டம் இல்லை: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை ஒட்டி, கிராம சபை கூட்டத்தை நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர்  நிராகரித்ததை எதிர்த்து கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியம் ராஜேந்திரபட்டினம் கிராம ஊராட்சித் தலைவர் சுரேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களை தவிர, தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ம் தேதி கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும். அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் நாகசைலாஆஜராகி வாதிட்டார். இதுகுறித்து விளக்கம் அளிக்கும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 6ம் தேதி தள்ளிவைத்துள்ளார்.

Related Stories: