உத்தமபாளையம் ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த 6 கவுன்சிலர்கள் நீக்கம்!: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அறிவிப்பு

சென்னை: உத்தமபாளையம் ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த 6 கவுன்சிலர்கள் நீக்கம் செய்யப்படுவதாக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அறிவித்துள்ளனர். ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதீஸ்வரன், அந்தோணி, மூக்கம்மாள், அறிவழகன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கவுன்சிலர்கள் செல்வி, கலைச்செல்வி ஆகியோரும் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அறிவித்துள்ளார்கள். 6 கவுன்சிலர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக நிர்வாகிகள் சந்திரசேகரன், பிரசாத் ஆகியோரும் நீக்கம்  செய்யப்பட்டிருக்கின்றன.

Related Stories:

>