செஸ் வரியை கைவிட்டால் ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதற்கு தமிழகம் சம்மதம் தர தயார்!: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: தமிழகத்தின் சூழ்நிலை, சுற்றுச்சூழல் மாறும்போது திமுகவின் நிலைப்பாடும் மாறும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், செஸ் வரியை கைவிட்டால் ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதற்கு தமிழகம் சம்மதம் தர தயார் என்று கூறினார். மாநிலங்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானத்தில் இருந்து மட்டுமே வரி வருவாய் கிடைக்கிறது. மாநில வரி வருவாயை ஒன்றிய அரசு எடுத்துக்கொண்டால் மாநிலங்கள் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும்? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: