கோயில்களில் இன்று முதல் பக்தர்கள் அன்னதான கூடங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

சென்னை:  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட அறிக்கை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 754 கோயில்களில், தரிசனத்துக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணிசுவாமி கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில்களில் நாள் முழுதும் அன்னதானம் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. கொரோனா  காரணமாக கோயில்களில் உணவு பொட்டலமாக வழங்கப்பட்டது. இந்த நடைமுறையினை மாற்றி அன்னதானம் கோயில்களில் இன்று முதல் (20.9.2021) வழங்கப்படும்,

அதன்படி, திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அனைத்து அன்னதானம் வழங்கும் கோயில்களிலும் அன்னதானக்கூடங்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு அன்னதானம் இலையில் பரிமாறப்படும். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் அன்னதானம் உணவுப்பொட்டலங்களாக பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாம்பரம் கிஷ்கிந்தா வசம் உள்ள 177 ஏக்கர் நிலம் மீட்கப்படும்

தாம்பரம் கிஷ்கிந்தா வசம் உள்ள 177 ஏக்கர் நிலம், பாப்பாசத்திரம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சொந்தமானது.இந்து சமய அறநிலையத்துறை, வருவாய் துறை மூலம் நிலத்தை திருப்பி ஒப்படைக்கக் கோரி பலமுறை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

Related Stories:

>