ஆட்டோவை நிறுத்தி ஜூஸ் குடித்தார்... 61,000 இழந்தார்

ஆவடி: ஆட்டோவை நிறுத்தி ஜூஸ் குடித்தபோது 61 ஆயிரம் ரூபாயை திருடிக்கொண்டு மர்ம நபர் தப்பிவிட்டார். ஆவடி அருகே கோவில்பதாகை கலைஞர் நகரை சேர்ந்தவர் லீலாவதி (53). இவர் நேற்று காலை ஆவடியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.61 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். பின்னர் அந்த பணத்ைதயும் தான் ஏற்கனவே கையில் வைத்திருந்த பணத்தையும் சேர்த்து ரூ.61 ஆயிரத்தை கைப்பையில் வைத்துகொண்டு ஆட்டோவில் வீட்டுக்கு சென்றுள்ளார்.ஆவடி, ஓ.சி.எப் சாலையில் ஆட்டோவை நிறுத்தி கடையில் ஜூஸ் வாங்கி குடித்துவிட்டு பிறகு ஆட்டோவில் வீட்டுக்கு சென்றார்.

அங்கு சென்று பார்த்தபோது பணப்பையை காணவில்லை என்றதும் கடும் அதிர்ச்சி அடைந்தார். ஜூஸ் கடைக்கு சென்றபோது ஆட்டோவில் இருந்த பணப்பையை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து லீலாவதி கொடுத்துள்ள புகாரின்படி, ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பணத்தை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>