நெல்லையில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

நெல்லை: மாநகர பகுதியில் சாலைகள் மற்றும் பொது இடங்களில் போக்குவரத்திற்கு  இடையூறாக மாடுகள் சுற்றித்திரிவது வாடிக்கையாக உள்ளது. அதனால் விபத்துக்கள்  நடைபெறும் அபாயம் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள்  தரப்பில் இருந்து மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டன.  

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் உத்தரவுப்படி நேற்று நெல்லை  மண்டலம் அலகு எண் 1 பகுதியில் உள்ள சாலைகளில் நின்ற மாடுகளை மாநகராட்சி  ஊழியர்கள் பிடித்தனர். பின்னர் அவற்றை பவுன்டரியில் அடைத்தனர். மாடுகளை  பொது இடங்களில் திரிய விடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என  அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: