மருத்துவ சான்றிதழில் இறப்பின் காரணம் திருப்தி அளிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அதிகாரப்பூர்வ ஆவணப்படிவம் பெறலாம்: பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்

சென்னை: மருத்துவ சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள இறப்பின் காரணம்  திருப்தி அளிக்காவிட்டால் கலெக்டரிடம் விண்ணப்பித்து அதிகாரப்பூர்வ ஆவணப்படிவம் பெற்றுக்கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:  இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இறப்பின் காரணம்  கொரோனா என குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ ஆவணம் வழங்குவதற்கான எளிமையான  வழிக்காட்டுதல்களை வழங்கிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

அதன்படி  மாவட்ட அளவில் குழு அமைத்து, கொரோனா இறப்புக்கு அதிகாரப்பூர்வ ஆவணப்படிவம் வழங்கிட வழிக்காட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. மருத்துவ  சான்றிதழில் குறப்பிட்டுள்ள இறப்பின் காரணம் திருப்தி அளிக்காவிட்டால்  மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட  குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு, கொரோனா இறப்புக்கான அதிகாரபூர்வ  ஆவணப்படிவம் வழங்கப்படும்.

Related Stories: