பிரதமர் மோடி நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் : ஜனாதிபதி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து!!

டெல்லி : பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி இன்று 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றும் தொடர்ந்து நாட்டுக்கு மோடி சேவை செய்ய வேண்டும், என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதே போல் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மோடி அவர்களின் தனித்தன்மை வாய்ந்த பார்வை, தனித்துவ தலைமை பண்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை ஆகியவை நாட்டின் அனைத்து நிலையிலான வளர்ச்சிக்கு வழிவகுத்து உள்ளது.  அவர் நீண்டகாலம் சுகாதாரம் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வாழ்த்துகள், என தெரிவித்து உள்ளார்.

இதே போல் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பிரதமர் மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் அவர் வாழ வேண்டும்,எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>