தனியார் கூரியர் வாகனத்தில் 1.18 கோடி மதிப்பிலான 182 கிலோ வெள்ளி பறிமுதல்: வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிரடி

சென்னை: தமிழக அரசின் வணிக வரித்துறைக்கு, வரி ஏய்ப்பு செய்வோரால் அரசுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த இழப்பை தடுக்கும் வகையில் அமைச்சர் மூர்த்தி வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு சோதனையை முடுக்கி விட்டுள்ளார். இதையடுத்து ,மாநிலம் முழுவதும் 103 ஜவுளி கடைகளில் வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 3வது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், சேலத்தில் தனியார் கூரியர் வாகனத்தில் எந்த வித ஆவணங்கள் இல்லாமல், தங்கம், வெள்ளி நகைகள் எடுத்து செல்லப்படுவதாக தகவல் வந்தது. அதன்ேபரில் வணிகவரி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் எந்த வித ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 182.63 கிலோ வெள்ளி, 588 கிராம் தங்கம் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. இதில், வெள்ளியின் மதிப்பும் மட்டும் ரூ.1 கோடியே 18 லட்சத்து 70 ஆயிரத்து 950 ஆகும். தங்கத்தின் மதிப்பு ரூ.26 லட்சத்து 24 ஆயிரம் என மொத்தம் ரூ.1.45 கோடி ஆகும். இதற்காக செலுத்த வேண்டிய வரி மட்டும் ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 509 ஆகும். இந்த வரியை செலுத்தாமல் கொண்டு செல்லப்பட்ட தங்கள், வெள்ளி பொருட்களை வணிகவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பொருட்களுக்கான வரி மற்றும் அபராதம் ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 509 என மொத்தம் ரூ.8 லட்சத்து 71 ஆயிரத்து 18 விதித்து வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories:

>