அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் விவரங்கள் ஆன்லைன் தகவல் பலகையில் இடம்பெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

சென்னை: தேர்தலின்போது திமுக கொடுத்த 500 வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

அறிவிப்புகளை செயல்படுத்தும் போது வழக்குகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அறிவிப்புகள் செயல்படுத்தப்படுவதை தான் கண்காணிக்க உள்ளதாக முதல்வர் கூறினார்.

மேலும்,  வாக்குறுதிகள் அனைத்தும் அரசாணைகளாக மாற வேண்டியது அவசியம். ஒவ்வொரு அறிவிப்பையும் காலத்தை நிர்ணயித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் பொறுப்பேற்கவேண்டும். இதனையடுத்து, அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் விவரங்கள் ஆன்லைன் தகவல் பலகையில் இடம்பெறும் என்று எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>