அமெரிக்காவில் காலிஸ்தான் தீவிரவாதிகளை வளர்த்து விடும் சீனா, பாக்.: இந்தியாவில் தாக்குதல் நடக்கும் அபாயம்

புதுடெல்லி: காலிஸ்தான் இயக்கத்தினர் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இயங்கி வருகின்றனர். இவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்து வருகிறது. இவர்கள் சீக்கிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்கள் இயக்கத்தில் இணைத்து கொண்டு பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். காலிஸ்தான் இயக்க ஆதரவாளர்கள் தான் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பாகிஸ்தானில் வெளிவரும் ஒரு இதழில் ‘அமெரிக்காவில் காலிஸ்தானியரின் செயல்பாடுகள்’ என்ற கட்டுரை வெளியானது.

இந்த கட்டுரையை ஆய்வு செய்த ஹட்சன் பல்கலை. காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதிகள் அமெரிக்காவில் வேரூன்றி வருவதாகவும், இவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு இருப்பதால் இந்தியாவில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. வட அமெரிக்காவில் இயங்கிவரும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றால் 1980ல் அரங்கேறிய வன்முறை போன்று மீண்டும் நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: