பெங்களூரு விதானசவுதா அறையில் பீர் பாட்டில் : விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவு

பெங்களூரு : பெங்களூரு விதானசவுதாவில் உள்ள அறை ஒன்றில் இரண்டு காலி பீர் பாட்டில்கள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு பின் நேற்று முதல் பேரவை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக மாநில அரசின் தலைமை செயலகமான விதானசவுதாவுக்கு மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் வருவது குறைவாக இருந்தது.

பெரும்பான்மையான அமைச்சர்கள் விதானசவுதா வராமல் தங்கள் வீட்டில் இருந்தப்படி அதிகாரிகளை வரவழைத்து பணிகள் மேற்கொண்டு வந்தனர். இதனால் விதானசவுதாவில் அதிகாரிகள், பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இந்நிலையில் நேற்று முதல் பேரவை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதை தொடர்ந்து அனைத்து அறைகளும் திறக்கப்பட்டது. இதில் 2வது மாடியில் உள்ள அறை எண் 208ல் இரு பீர் பாட்டில்கள் மேஜை மீது வைக்கப்பட்டிருந்ததை யாரோ செல்போனில் படம் பிடித்து சமூக வளைத்தலங்களில் விட்டுள்ளார்.

 இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறையில் அமர்ந்து மதுபான விருந்து சாப்பீட்டார்களா? பீர் பாட்டில்கள் எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்ைக கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு சபாநாயகர் விஷ்வேஷ்வர ஹெக்டே காகேரி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: