பொன்னேரியில் மெகா லோக் அதாலத் 568 வழக்குகளுக்கு தீர்வு

பொன்னேரி: பொன்னேரியில் நடைபெற்ற மெகா லோக் அதாலத்தில் 568 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. பொன்னேரியில் கூடுதல் சார்பு நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்கள் 1,2, உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளன.  இந் நிலையில் நேற்றுமுன்தினம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மெகா லோக் அதாலத் மக்கள் நீதிமன்றத்தில் குற்ற வழக்குகள், நில சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் என மொத்தம் 568 வழக்குகள் பொன்னேரி மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ 3,15,53,100 சமரசம் செய்து வைக்கப்பட்டது.  இதில் கூடுதல் சார்பு நீதிபதி விஜயராணி, முதன்மை சார்பு நீதிபதி பாஸ்கர், கூடுதல் சார்பு நீதிபதி காரல்மார்க்ஸ், குற்றவியல் நீதித்துறை நடுவர் 2, விஜயலட்சுமி பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திவ்ய குமார், ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்மணி, செல்வம், குமரன் உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தியது.

Related Stories: