வருமானவரி கணக்கு சமர்ப்பிக்க கெடு நீட்டிப்பு

புதுடெல்லி: தனிநபர்கள் வருமான வரி கணக்கை ஆண்டு தோறும் வருமான வரி கணக்கை ஜூலை 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், இந்த கெடுவை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து வரிகள் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த மாதம் கெடு முடிய உள்ள நிலையில், இந்த அவகாசம் மேலும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோரின் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதுபோல், நிறுவனங்களுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் அடுத்த ஆண்டு பிப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல், தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யஅவகாசம் அடுத்த ஆண்டு ஜன. 15் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த கெடு அக்் 31 வரை வழங்கப்பட்டிருந்தது. திருத்திய கணக்கு சமர்ப்பிக்க மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>