தனி நபர்கள் தங்களின் சிலைகளை கோயில்களில் வைத்தல் அவற்றை கரைக்க அறநிலையத்துறை மூலம் நடவடிக்கை: காவல் ஆணையர் ஜிவால் பேட்டி

சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட, ஊர்வலம் எடுத்துசென்று கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் தங்கள் இல்லங்களில் விநாயகர் சிலையை வித்து வழிபட, நீர் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரை விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதியில்லை என காவல் ஆணையர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தனி நபர்கள் தங்களின் சிலைகளை கோயில்களில் வைத்தல் அவற்றை கரைக்க அறநிலையத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்த்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒன்றிய, மாநில அரசுகள் விநாயகர் சதுர்தியை தங்கள் வீடுகளிலிலேயே கொண்டாட வலியுறுத்திருந்த நிலையில் இன்று காவல் ஆணையர் ஜிவால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நாளை பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என காவல்த்துறையினர் கூறியுள்ளார். சென்னை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். மக்கள் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: