நெலாக்கோட்டை பகுதிக்கு புதிய மின்மாற்றி-பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி

பந்தலூர் : பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பந்தலூர் அருகே நெலாக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான விலங்கூர், போர்டு காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த பல வருடங்களாக குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வந்ததால் மின் சாதனங்கள் உபயோகப்படுத்த முடியாமல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் அவதியடைந்தனர்.

இதுதவிர  இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்க முடியாமலும், வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி உள்ளிட்ட மின்சாதனப்பொருட்களை பயன்படுத்த முடியாமலும், குடிநீர் விநியோகம் செய்திட முடியாமலும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் நெலாக்கோட்டை அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

குறைந்த மின்னழுத்த குறைப்பாட்டினை சரி செய்திட மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மின்வாரியம் சார்பில் புதிய மின்மாற்றி நெலாக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டு மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

நேற்று நடந்த  இந்த நிகழ்ச்சிக்கு  மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மின்வாரியம் சார்பில் புதிய மின்மாற்றி நெலாக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டு மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்வந்தனர். நிகழ்ச்சியில்  பொறியாளர் ஜெயபிரகாஷ், உதவி செயற் பொறியாளர் சிவகுமார், உதவி மின் பொறியாளர் ஹரிகிருஷ்ணன், நெலாக்கோட்டை ஊராட்சி தலைவர் டெர்மிளா பன்னீர்செல்வம், துணை தலைவர் நௌபல்ஹாரிஷ் மற்றும் மின்வாரிய  ஊழியர்கள் பலர்  கலந்துகொண்டனர்.

Related Stories: