டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முடிப்பதற்கான முயற்சி எடுத்து வருகிறோம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: அடையாறு நகர நல்வாழ்வு மையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தை அமைச்சர் கே.என்.நேரு. தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்; டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முடிப்பதற்கான முயற்சி எடுத்து வருகிறோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் தேவை. நீதிமன்ற உத்தரவை பொறுத்து தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும். உள்ளாட்சி தேர்தலை விரைவில் முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளன. வார்டு வரையறை பணிகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது. புதிய நகராட்சி, மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் வார்டு வரையறை பணிகள் செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டிருக்கிறது. அரசின் நிதி நிலைமையைக் கணக்கில் கொண்டு பணிப் பாதுகாப்புக் கோரி தொடர்ந்து போராடி வரும் மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: