சிட்லபாக்கம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: பேரவையில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசுகையில், தாம்பரம் தொகுதி, சிட்லபாக்கம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு ஆவன செய்யுமா?: அமைச்சர் கே.என்.நேரு: செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம், மாடம்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளை செம்பாக்கம் நகராட்சியுடன் ஒருங்கிணைத்து பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பேரூராட்சிகளுடன் செம்பாக்கம், அனகாபுத்தூர் நகராட்சிகளையும், தாம்பரம் நகராட்சியுடன் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த 24ம் தேதி சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எனவே, சிட்லபாக்கம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஸ்.ஆர்.ராஜா: தாம்பரம் நகராட்சியில் 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப்பணி நிறைவடையவில்லை. என் தொகுதிக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட வளசரவாக்கம், ஆவடி, அம்பதூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணி முடிவடைந்து விட்டது. எனவே, எனது தொகுதியில்  பாதாள சாக்கடை பணிக்கு தனி கவனம் செலுத்தி உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். அமைச்சர் கே.என்.நேரு: உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: