தமிழகம் முழுவதும் 12 கூடுதல் எஸ்பிக்கள் பணியிடமாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 12 கூடுதல் எஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கோவை காவலர் பயிற்சி பள்ளி முதல்வராக இருந்து கண்ணன், சென்னை தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் கண்காணிப்பாளராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜோஷ் தங்கையா சென்னை தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் கண்காணிப்பாளராகவும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் இருந்த சங்கர், சென்னை சிறப்பு பிரிவு எஸ்பிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளராகவும், கோவை மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த சங்கு திருநெல்வேலி மாவட்டம் சைபர் க்ரைம் பிரிவுக்கும் விழுப்புரம் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த தேவநாதன் கோவை மாவட்ட சைபர் க்ரைம் பிரிவுக்கும், ஈரோடு அதிவிரைவுப்படையில் இருந்த விவேகானந்தன் கிருஷ்ணகிரி மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும்.

 சென்னை தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் இருந்த ஜான்சன் திருப்பூர் மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், திருப்பத்தூர் மாவட்ட தலைமையிடத்தில் இருந்த சின்ராம் திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், திருப்பூர் மாவட்ட தலைமையிடத்தில் இருந்த கிருஷ்ணமூர்த்தி நீலகிரி மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், நீலகிரி மாவட்ட தலைமையிடத்தில் இருந்த ஜனார்த்தனம் கோவை காவலர் பயிற்சி பள்ளி முதல்வராகவும், நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவில் இருந்த சசிகுமார் நீலகிரி மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாகவும், கோவை நகர சிறப்பு நுண்ணறிவு பிரிவில் இருந்த சந்திரசேகர் நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும் பணியிடமாற்றம் என தமிழகம் முழுவதும் 12 கூடுதல் எஸ்பிக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: