மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்..!

புதுச்சேரி: மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி தீர்மானத்தை முன்மொழிய, விவாதமின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி மாநில 15வது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டதொடர் கடந்த ஆக.26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

துணைநிலை ஆளுநரின் தமிழ் உரையுடன் தொடங்கிய இந்த பட்ஜெட் கூட்டதொடர்,முதல்வர் தாக்கல் செய்த மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் அடுத்து,ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையில்காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.கடந்த ஜூலை மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: