தமிழக அரசின் இலங்கை தமிழர்களுக்கான அறிவிப்புகளுக்கு வரவேற்பு: அண்ணாமலை அறிக்கை

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இலங்கையில் இந்தியா கட்டிக்கொடுக்கும் வீட்டு மனைகள் திட்டம் தான் சர்வதேச அளவில் இந்தியா செய்துவரும் மிக பெரிய திட்டமாக கருதப்படுகிறது. மீனவர்கள் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்கள் உள்ளடக்கிய கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு புலம் பெயர்ந்துள்ள இலங்கை தமிழர்களின் நலன் காக்க தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

 

இலங்கை தமிழர்களின் வீட்டுவசதி, கல்வி, வேலைவாய்ப்பு திட்டங்களுக்காக ₹317.40 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கை தமிழர்களின் நலன் காக்க ஒன்றிய அரசுடன் மாநில அரசு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தமிழக பாஜவின் கோரிக்கையாக உள்ளது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: