தமிழக ஆளுனர் புரோஹித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநராகவும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு!!

டெல்லி : சமீப காலமாக பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் நியமனம், மாற்றம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அண்மையில் மணிப்பூர் மாநில கவர்னராக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்,பஞ்சாப் மாநில ஆளுநரும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் இருந்து வந்த வி பி சிங் பட்னோர் அவர்களின் பதவிக்காலம் கடந்த 20ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையொட்டி தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக கவர்னராக கடந்த 2017, செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் பன்வாரிலால் புரோகித். இவரது பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராகவும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு, புரோகித் அசாம் மாநில ஆளுநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: