சதுர மைலுக்கு 1,826 கேமரா டெல்லியில் அதிக சிசிடிவி பொருத்துவதில் சாதனை: லண்டன், நியூயார்க்கை முந்தியது

புதுடெல்லி: உலகில் மிக அதிகமாக கண்காணிப்பு வசதி செய்யப்பட்ட நகரங்கள் குறித்து, ‘போர்ப்ஸ் இந்தியா’ பத்திரிகை புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதை மேற்கோள் காட்டி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘டெல்லியில் ஒரு சதுர மைலுக்கு 1,826.6 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், உலகளவில் அதிக சிசிடிவி பொருத்தப்பட்ட நகரம் என்ற பெருமையை டெல்லி பெற்றுள்ளது. லண்டன் நகரம் 1,138 கேமராக்களுடன் 2வது இடத்தில் உள்ளது. ஷாங்காய், நியூயார்க் மற்றும் லண்டன் போன்ற நகரங்களை பின்னுக்கு தள்ளி டெல்லி முதலிடம் பெற்று இருப்பது பெருமை அளிக்கிறது,’ என கூறியுள்ளார்.  டெல்லியை தொடர்ந்து, 609.9 சிசிடிவி கேமராக்களுடன் இந்திய அளவில் சென்னை 3வது இடத்தையும், மும்பை 157.4 கேமராக்களுடன் 18வது இடத்தையும் பிடித்துள்ளது .

Related Stories: