9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்: அரசு உறுதி

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டப் பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது.அப்போது வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 2019ம் ஆண்டில் மாநில அரசானது வேலூர் மாவட்டத்தை  பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாகவும், விழுப்புரம் மாவட்டத்தை விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டு மாவட்டங்களாவும், காஞ்சிபுரம் மாவட்டத்தை காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டாகவும், திருநெல்வேலியை பிரித்து திருநெல்வேலி, தென்காசி என இரண்டு மாவட்டங்களாக பிரித்து உத்தரவிட்டது.இதன்படி நான்கு பழைய மாவட்டங்கள் ஒன்பது மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. இதனால் தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 31ல் இருந்து 36 ஆக உயர்ந்துள்ளது. புதியதாக ஏற்படுத்தப்பட்ட 9 மாவட்டங்களுக்கு  உட்பட்ட வார்டுகளை வரையறை செய்ய வேண்டிய காரணத்தால் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. தற்போது இவற்றுக்கு விரைவில் தேர்தல்கள் நடத்தப்படும்.

Related Stories: