தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கே.டி.ராகவன் ட்விட்டரில் பதிவு: பாலியல் தொடர்பான வீடியோ வெளியானதால் விலகியதாக தகவல்

சென்னை: தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கே.டி.ராகவன் ட்விட்டரில் அறிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ ஒன்று வெளியான நிலையில் விலகியதாக கூறப்படுகிறது. என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும் என ட்வீட் செய்த்துள்ளார். தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன் என பதிவிட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாஜகவில் இணைந்தார் ஊடகவியலாளர் மதன். இவர் மதன் டைரி என்ற பெயரில் யூ-ட்யூப் சேனல் நடத்திவருகிறார். இந்தச் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மதன், பாஜகவில் உள்ள சில தலைவர்கள் பெண்களிடம் அத்து மீறி நடக்கின்றனர். பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கின்றனர். அதற்காக சில இடங்களையும் சென்னையில் வைத்துள்ளனர். 15 தலைவர்கள் இதுபோன்று செயலில் ஈடுபடும் வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் உள்ளன. பாஜக மாநில பொறுப்பில் உள்ள கே.டி. ராகவன், ஒரு பெண் நிர்வாகியிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்று  பாருங்கள் எனக் கூறி வீடியோவை வெளியிட்டார்.

Related Stories: