ஆப்கானிலிருந்து ஆக 31-க்குள் படைகளை திரும்ப பெறும் முடிவில் மாற்றமா?.. அதிபர் ஜோ பைடன் ஆலோசனை

வாஷிங்டன்: ஆப்கானிலிருந்து ஆக 31-க்குள் படைகளை திரும்ப பெறும் முடிவில் மாற்றம் செய்வது குறித்து அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது. அரசுக்கும், ராணுவத்துக்கும் ஆலோசனை நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வரும் 31ஆம் தேதிக்குள் அனைத்து அமெரிக்கர்களும் மீட்கப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்த ஜோ பைடன், படைகளை திரும்பப்பெறும் முடிவில் மாற்றம் இருக்காது என நம்புகிறேன்; ஆனால் அதுபற்றி ஆலோசனை நடக்கப்போகிறது. தலிபான்கள் அப்பாவி ஆப்கான் மக்களையும், அமெரிக்க படைகளை குறிவைப்பார்கள் என எங்களுக்கு தெரியும். தலிபான்கள் உள்பட எந்த பயங்கரவாத அமைப்பினரையும் நம்பவில்லை.

தலிபான்கள் ஆக்கப்பூர்வமான ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஐஎல் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களை விழிப்புடன் கண்காணிக்கிறோம் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; தலீபான்களால் பாதிக்கப்படக் கூடியவர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தங்கள் நாட்டு வீரா்களை அந்த அமைப்பினா் தாக்கினால், அதற்கு பலத்த பதிலடி கொடுக்கப்படும் அவா்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினாலோ, அமெரிக்க வீரா்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தாலோ அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: