கர்தார்பூர் குருத்வாராவில் வழிபாடு இந்திய சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் நிபந்தனை

இஸ்லாமாபாத்: செப்டம்பர் 21ம் தேதி சீக்கிய மத குருவானா பாபா குருநானக் தேவின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு இந்தியாவை சேர்ந்த ஏராளமான சீக்கியர்கள் சென்று வழிபாடு செய்வது வழக்கம். தற்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் அரசு இந்தியாவை ஆபத்தான நாடுகள் பட்டியலில் வைத்திருந்தது. இது கடந்த 21ம் தேதியோடு முடிந்து விட்டது. இந்நிலையில், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டும் கர்தார்பூர் குருத்வாராவுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும், பாகிஸ்தானில் ஆர்ஏடி பரிசோதனை செய்யப்படும். தொற்று உறுதியானால், அவர்கள் இந்தியா திருப்பி அனுப்பப்படுவார்கள்.

Related Stories: