இந்தியாவை சேர்ந்தவர்கள் ஐக்கிய அரபு நாட்டுக்கு இனி சுற்றுலா போகலாம்

புதுடெல்லி: அரபு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரசு எமிரேட்ஸ், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு விமான பயணிகளுக்கு தடை விதித்து இருந்தது. வெளிநாடுகளில் தங்கியுள்ள தனது நாட்டை சேர்ந்தவர்கள் வரவும், இதர வெளிநாடுகளுக்கு விமானங்களில் செல்பவர்கள் தனது நாட்டில் இறங்கி செல்லவும் மட்டுமே அனுமதி அளித்து இருந்தது. இந்நிலையில், தனது நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை தற்போது தளர்த்தி உள்ளது. இதன்படி, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, உகண்டா, நைஜரியா உள்ளிட்ட சார்க் நாடுகளை சேர்ந்தவர்கள், தனது நாட்டுக்கு சுற்றுலா விசாவில் வரலாம் என்று அறிவித்துள்ளது. இதுவரை தனது நாட்டுக்கு வராதவர்களும், கடந்த 14 நாட்களில் வந்து செல்லாதவர்களும் மட்டுமே இந்த விசாவில் வரலாம் என்று நிபந்தனையும் விதித்துள்ளது.

Related Stories: