பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அனைத்து கட்சி குழுவினர் நாளை மோடியுடன் சந்திப்பு: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை

பாட்னா: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி, பீகார் முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி குழு நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறது. பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும்நிலையில், அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், நாளை பிரதமர் மோடியை டெல்லி சென்று சந்திக்கிறார். அவருடன், பீகாரைச் சேர்ந்த அரசியல் கட்சிகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதி அடங்கிய 11 பேர் கொண்ட குழுவும் செல்கிறது. இந்த குழுவிற்கு முதல்வர் நிதிஷ்குமார் தலைமை தாங்குகிறார். இவருடன் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுக்க உள்ளனர்.

முன்னதாக, சமஸ்திபூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், ‘ஞாயிற்றுக்கிழமை இரவு (இன்று) டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறேன்.  ஒவ்வொரு கட்சியையிலும் இரு அவைகளிலும் தலா எம்எல்ஏவை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்னைத் தவிர 10 பிரதிநிதிகள் இந்த குழுவில் இடம் பெற்று இருப்பார்கள். பிரதமரை சந்திக்கும் போது, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்த உள்ளோம். சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த நாடு தழுவிய ஆதரவு உள்ளது’ என்றார்.

Related Stories: