ஆண் குழந்தை வேண்டி 8 முறை கருக்கலைப்பு; 1,500 ஸ்டீராய்ட்: மும்பை வக்கீல் மீது புகார்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாதர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருவக்கு, கடந்த 2007ம் ஆண்டு திருமணம் ஆகியுள்ளது. திரு.மணமான இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கருவுற்றிருந்த மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் ஆண் குழந்தைதான் வேண்டும் என பெண்ணின் கணவரும் அவரது குடும்பத்தாரும் தொடர்ந்து கூறி வந்தனர். இதனையடுத்து 2011ம் ஆண்டில் மீண்டும் கருவுற்றிருந்த அந்த பெண்ணின் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்றும் சட்டத்திற்கு விரோதமாக பார்த்துள்ளனர். கருவில் இருந்தது பெண் என தெரிந்ததும் கட்டாய கருக்கலைப்பும் செய்தனர்.

இதுபோன்று 8 முறை கருக்கலைப்பு செய்தனர். பின்னர் ஆண் குழந்தைதான் வேண்டும் என உறுதியாக இருந்ததோடு தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக்கிற்கு மனைவியை அழைத்துச் சென்று அங்கு சில நவீன சிகிச்சைகளையும் கொடுக்க வைத்திருக்கிறார். அந்த சிகிச்சையின் போது அப்பெண்ணுக்கு சுமார் 1,500 ஸ்டீராய்ட் மற்றும் ஹார்மோன் சார்ந்த மருந்துகளும் ஊசிகளும் செலுத்தப்பட்டது. இதுபோன்ற கொடுமைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் வெறுத்துப்போன அப்பெண் தந்தையின் உதவியுடன் காவல் நிலையத்தில் கணவர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் புகாரளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: