ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனே காரணம் - டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனே காரணம் என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாடியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதை அடுத்து, தலிபான்கள் பெரும்பான்மையான மாகாணங்களை கைப்பற்றினர். தலைநகர் காபூலையும் கைப்பற்றி உள்ளனர். இதனால், அந்நாட்டு அதிபர் பதவியை ராஜினாமா செய்த அஷ்ரப் கனி, தஜிகிஸ்தானுக்கு தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் விவகாரம் உலக நாடுகளில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து தலீபான்கள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகைக்குள் நுழைந்த தலீபான்கள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனே காரணம் என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாடியுள்ளார். கொரோனா அதிகரிப்பு, மெக்சிகோ எல்லைப் பிரச்சனை, பொருளாதார முடக்கம் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் பொறுப்பேற்று அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: