தெப்பக்காடு முகாமில் யானைகள் அணிவகுப்புடன் சுதந்திர தின விழா

கூடலூர்: கூடலூரில்  உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் நேற்று 75வது சுதந்திர தினவிழாவையொட்டி தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி  கொண்டாடப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள்  முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கள இணை இயக்குனர்  பத்மா தேசிய கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில், யானைகள் அணிவகுத்து நின்று  சுதந்திரக் கொடியை ஏந்தி துதிக்கை தூக்கி மரியாதை செலுத்த, வனத்துறையினரின்  அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், வனச்சரகர்கள் தயானந்த்,  சிவகுமார், மனோஜ்குமார், கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார், வனவர் சந்தன  ராஜ், வனத்துறை ஊழியர்கள் பணியாளர்கள் யானை பாகன்கள் உதவியாளர்கள் மற்றும்  பழங்குடியின பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

கூடலூர்  கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் கோட்டாட்சியர்  சரவண கண்ணன் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். தாசில்தார்  சிவக்குமார், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில்  பொறியாளர் (பொறுப்பு ஆணையர்) பார்த்தசாரதி தேசிய கொடியேற்றி இனிப்பு  வழங்கினார். கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா  தேசிய கொடியை ஏற்றினார். கூடலூர் அரசு கலை அறிவியல்  கல்லூரியில் கல்லூரி முதல்வர் நெடுஞ்செழியன் தேசிய கொடி ஏற்றினார்.

 கல்லூரி நாட்டு நலப்பணி  திட்ட அலுவலர் மகேஸ்வரன், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கொரோனா தொற்றை முன்னிட்டு நடைபெற்ற  போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்  மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.கூடலூர் கோட்ட வன அலுவலகத்தில் கோட்ட வன அலுவலர் கொம்மு  ஓம்காரம் தேசிய கொடி ஏற்றினார். வனச்சரகர்கள் கணேசன், ஆனந்தகுமார், மனோகரன்  மற்றும் வனத்துறை ஊழியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில்,  மனித வன விலங்கு மோதல்களை தடுக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 10 வனத்  துறை பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Related Stories: