வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர். ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக 16, 17, 18 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19-ம் தேதி வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின்ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 16-ம் தேதி வரையும், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் 19-ம் தேதி வரையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். மன்னார் வளைகுடா பகுதிகளில் வரும் 16, 17-ம் தேதிகளில்மணிக்கு 35 முதல் 45 கி.மீ.வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: