மேலூர் ஜிஹெச்சில் நர்சுகளின் கொரோனா விழிப்புணர்வு டான்ஸ்: சமூக வலைத்தளங்களில் செம ‘‘வைரல்’’

மேலூர்: மேலூர் அரசு மருத்துவமனையில் பெண் செவிலியர்கள் ஆடிய கொரோனா விழிப்புணர்வு நடனம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம், மேலூர் அரசு மருத்துவமனை செவிலியர்கள் கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் ரஜினிகாந்த் நடித்த ‘‘படையப்பா’’ திரைப்பட பாடலின் மெட்டுக்கு ஏற்ப விழிப்புணர்வு பாடலை அமைத்து, நடனம் ஆடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது தற்போது வைரலாகி வருகின்றது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மருத்துமனை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக செவிலியர்களின் விழிப்புணர்வு நடனமும் செய்யப்பட்டது. தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மொத்தத்தில் கொரோனா குறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்’’ என்றனர்.

Related Stories: