தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட 5,000 காங்கிரசாரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்: ஒன்றிய அரசு நிர்பந்தம் என குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் உட்பட 5 ஆயிரடம் கணக்குகளை டிவிட்டர் நிர்வாகம் முடக்கி உள்ளது. டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். சிறுமியின் பெற்றோரை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த புகைப்படத்தை உடனடியாக நீக்கிய டிவிட்டர், ராகுல் காந்தியின் கணக்கை முடக்கியது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவின் தலைவர் ரோகன் குப்தா கூறுகையில், ‘‘காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு மற்றும்  கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர் என 5000 பேரின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. டிவிட்டர் நிறுவனம் ஒன்றிய அரசின் அழுத்தத்தின் கீழ் செயலாற்றி வருகின்றது. எஸ்சி பிரிவினருக்காக தேசிய ஆணையம் பகிர்ந்த இதே புகைப்படத்தை டிவிட்டர் இன்னும் நீக்கவில்லை” என்றார். கட்சியின் பொது செயலாளர்கள் ரன்தீப் சுர்ஜிவாலா, வேணுகோபால்உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

Related Stories: