ஓரியன்ட் நிறுவனத்தின் அதிவேக சீலின் பேன் அறிமுகம்

சென்னை: ஓரியண்ட் `நிறுவனம், பால்கன் 425 என்ற அதிவேக சீலிங் பேனை, தமிழக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. சி.கே.பிர்லா குழுமத்தை சேர்ந்த ஓரியண்ட் எலக்ட்ரிக் நிறுவனம், 1200 மி.மீ ஸ்வீப் கொண்ட பால்கன் 425 என்ற சீலிங் பேனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மின்விசிறி நிமிடத்துக்கு 425 முறை சுழலக்கூடியதால், காற்றை வேகமாகவும், விசாலமாகவும் வீசும். நீடித்து உழைக்கும் வகையில் ரிப்டு அலுமினியம் இறக்கைகள் கொண்டுள்ளது  என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோல், இதே ரகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஓரியன்ட் சம்மன் பிரீஸ் புரோ என்ற அதிவேக மின்விசிறியானது, வலிமையான 14 போல் மோட்டார் மற்றும் நவீன பிஎஸ்பிஓ தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது 235 சிஎம்எம் அளவில் காற்றை வீசுகிறது.

பால்கன் 425.  விலை ரூ.2,655 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வெள்ளை, மேட் பிரவுன், மெட்டாலிக் பிரான்ஸ் காப்பர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஓரியன்ட் எலக்ட்ரிக் நிறுவன துணை செயல் தலைவர் அத்துல் ஜெயின் கூறியதாவது: ஓரியன்ட் எலக்ட்ரிக் நிறுவனம் தமிழக சந்தையில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. எனவே, இங்குள்ள வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தயாரிப்புகள் சந்தைப்படுத்தப்படுகின்றன. புதிதாக அறிமுகம் செய்துள்ள அதிவேக மின்விசிறிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம் காலத்திலும் குளுமையான அனுபவத்தை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: