பாலிவுட் நடிகர் அனுபவ் ஷ்யாம் மரணம்

மும்பை: பிரபல பாலிவுட் குணசித்ர நடிகர் அனுபவ் ஷியாம் (63). லஜ்ஜா, பாண்டிட் குயின், நாயக், சத்யா, தில்சே, சிலம் டாக் மில்லினர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மான் கீ ஆவாஸ்: பிரதிக்யா தொடரில் நடித்து புகழ்பெற்றார். கடைசியாக இந்த தொடரின் 2ம் பாகத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் அனுபவ் ஷ்யாமிற்கு கடந்த வாரம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மும்பை கோரோகான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். நேற்று அவரது இறுதி சடங்குகள் நடந்தது. அனுபவ் ஷ்யாம் மறைவுக்கு பாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories: