கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்..!

டெல்லி: கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்ேபாது,  கோவிஷீல்ட், கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக்- வி, அமெரிக்காவின் மடர்னா என நான்கு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காைவ சேர்ந்த ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்தவும் ஒன்றிய அரசு நேற்று அனுமதி அளித்தது.

இதனிடையே சில இடங்களில் தடுப்பூசி மாற்றிப்போடப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து போடுவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் இரு வேறு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவதால் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில் கிடைத்த முடிவுகள் தொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிக்கையில்; கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியை கலந்து அளிப்பது தொடர்பான ஆய்வுகளில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது பாதுகாப்பானது எனவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: