தமிழ்நாட்டில் 11 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு!: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு..!!

சென்னை: தமிழ்நாட்டில் 11 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாக கூறியிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 2 அல்லது 3 நாட்களுக்கு இவை பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பொது சுகாதார மைய மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மருத்துவ உபகரணமான ஹெமாபில்டரை சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார். பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழ்நாட்டின் தேவை 12 கோடி தடுப்பூசிகள் என்ற நிலையில் 2 கோடி அளவிற்கு கிடைத்திருப்பதாக கூறியிருக்கிறார். எஞ்சிய 9 கோடி தடுப்பூசிகள் கிடைக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் பேருந்து நிலையங்களில் திறக்கப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், ஒரு மின்விசிறி கூட அமைக்கப்படாமல் அடிப்படை வசதி இன்றி இருப்பது தெரியவந்திருப்பதாக மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அங்கு அடிப்படை வசதிகளை உருவாக்குவது குறித்து துறைசார்ந்த அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சீரமைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். டிசம்பர் மாத இறுதிக்குள் 1 கோடி பயனாளிகளை கண்டறிந்து நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்க்கான மருந்துகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Related Stories: