தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம்

சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆரம்ப வகுப்புகளில் சேர்வதற்கு வரும் 13ம் தேதி வரை  விண்ணப்பிக்க கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2021-22 ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை rte.tnschools.gov.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1,07,992 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக நடப்புக் கல்வியாண்டில் எல்கேஜி வகுப்பில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கு ஆகஸ்ட் 3ம் தேதி வரையில் 73 ஆயிரத்து 86 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதற்கு ஆகஸ்ட் 13ம் தேதி வரை கால நீடிப்பு வழங்கி அரசு அறிவித்துள்ளது.

Related Stories:

>