நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் வருத்தம் அளிக்கிறது!: பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் வருத்தம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்தின் போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளின் போராட்டம் மக்களை அவமானப்படுத்தும் வகையே உள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் வருத்தம் அளிப்பதாகவும் கூறினார்.

ஜூலை மாத ஜி.எஸ்.டி. வருவாய் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவது ஆகியவை குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாதம் நடத்த வேண்டும். விவாதத்தின் போது பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை நாடாளுமன்றம் 12 நாட்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் தற்போது வரை ஒருநாள் கூட சரியாக இயங்காத சூழலே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற விவகாரத்துறை பிரஹலத் ஜோஷி கூறியதாவது, நாடாளுமன்றத்தில் அமைச்சரின் கையிலிருந்த காகிதை கிழிந்தெறிந்துவிட்டு மன்னிப்பு கேட்காமல் இருப்பது, உறுப்பினரை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை அவமதிப்பதாகும் என கூட்டத்தில் பிரதமர் தெரிவித்ததாக கூறினார். மேலும், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 10 நாள்களாக முழக்கங்கள் எழுப்பி கூட்டத்தை நடத்தவிடாமல் செய்வது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி தெரிவித்தார்.

Related Stories:

>