ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைவரான முதல் பிரதமர் மோடி: முன்னாள் இந்திய தூதர் பெருமிதம்

ஐதராபாத்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் சுழற்சிமுறை தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன்மூலம், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பேற்கும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை பெற்றுள்ளார் மோடி. ஜூலை மாதம் தலைமைப் பொறுப்பேற்ற பிரான்சை தொடர்ந்து, ஆகஸ்ட் மாத தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. வரும் 9ம் தேதியன்று பிரதமர் மோடியின் தலைமையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவு செயலர் ஹர்ஷ் ஷ்ரிங்லாவும் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்து ஐநா.வின் முன்னாள் இந்திய தூதரான சையது அக்பரூதீன் கூறுகையில், ‘‘ஐநா.வின் 75 ஆண்டு கால வரலாற்றில், பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பேற்கும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். சர்வதேச நாடுகளை வழிநடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்பது இதன் மூலம் நிரூபணமாகி இருக்கிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் சிறப்பான முதலீடாக இருப்பதும் இதன்மூலம் தெரிய வந்துள்ளது,’ என்று டிவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இதற்கு முன்பு 1992ம் ஆண்டில் நரசிம்மராவ் பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடியும் இதற்கு முன்பு சிறப்பு அழைப்பாளராக உரையாற்றி உள்ளார்.

Related Stories: