அச்சுறுத்தும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 19.85 கோடியை தாண்டியது: 42.32 லட்சம் பேர் உயிரிழப்பு!

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42.32 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,232,892 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 198,547,026 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 179,285,118 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 90,069 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு தற்போது 15,029,016 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று அதிகம் பரவிய நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. அதிகபட்சமாக அமெரிக்காவில் 35,745,024 பேருக்கும், இந்தியாவில் 31,654,584 பேருக்கும், ரஷ்யாவில் 6,265,873 பேருக்கும், பிரேசிலில் 19,917,855 பேருக்கும், பிரான்சில் 6,127,019 பேருக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், இதுவரை இந்தோனேசியாவில் 94,119 பேரும், பிரேசிலில் 556,437 பேரும், ரஷியாவில் 158,563 பேரும், இந்தியாவில் 424,384 பேரும், அர்ஜெண்டினாவில் 105,721 பேரும், அமெரிக்காவில் 629,315 பேரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: