மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு சேவைகள் அமைய வேண்டும்: மனிதவள மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை: மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு சேவைகள் அமைய வேண்டும் என்று மனிதவள மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அரசு அலுவலர்களின் பணித்திறனை உயர்த்தும் வகையில் உரிய பயிற்சி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மனிதவள மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பகங்கள் மூலம் அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்கவும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் அனைத்துத் துறைகளிடமும் இணையதளம் மூலம் தகவல் பெறும் வசதிகளை மேம்படுத்தவும் அறிவுறுத்தினார்.

அரசு அலுவலர்களின் மனிதவள ஆற்றலினை மேம்படுத்தவும், தமிழக இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பினைப் பெருக்குவதற்கும்,  அண்ணா மேலாண்மைப் பயிற்சி மையம் மற்றும் போட்டித் தேர்வுப் பயிற்சி மையங்களின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்புகளை உயர்த்திடவும் முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். பவானிசாகரில் உள்ள அடிப்படைப் பயிற்சி மையத்தால் அரசுப் பணியாளர்களுக்கான பயிற்சியினைக் காணொலிக் காட்சி வாயிலாக இணைய வழி பயிற்சியாக அறிமுகப்படுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: