ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 262 வழக்குகள் பதிவு; 357 வாகனங்கள் பறிமுதல்: முகக்கவசம் அணியாத 692 பேர் மீது வழக்கு

சென்னை: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை  காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,  உத்தரவின்பேரில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் வாகன தணிக்கை நடந்தது. அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை போலீசாரின் வாகன தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், ஊரடங்கு தடையை மீறியதாக 262  வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 335 இருசக்கர வாகனங்கள், 20  ஆட்டோக்கள் மற்றும் 2 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 357 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 692 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 9 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: