கர்ப்பப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய சென்னை ஐஐடியுடன் இணைந்து அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் முயற்சி

சென்னை: கர்ப்பப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான ஆராய்ச்சியில் சென்னை ஐஐடியுடன் இணைந்து அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டுள்ளது. கர்ப்பப்பை புற்றுநோயை தாமதமாக கண்டறிவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் சென்னை ஐஐடியுடன் இணைந்து அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள ஐந்து வகையான புரோட்டீனைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் கர்ப்பப்பை புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும் என்று அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலைய மூத்த ஆராய்ச்சி மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோய் தாமதமாக கண்டறியப்படுவதால் கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 3.14 லட்சம் பெண்கள் இறந்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 44,000 பெண்கள் இறந்துள்ளனர். கர்ப்பப்பை புற்றுநோய் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியப்படாததால் கடந்த ஆண்டில் 2.07 லட்சம் பெண்கள் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். 5 வகையான சோதனைகள் மூலம் இதுவரை கண்டறியப்பட்டு வரும் கர்ப்பப்பை புற்றுநோயை இந்த ஆராய்ச்சிக்கு பிறகு ஒரே சோதனையில் கண்டறிய முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Related Stories:

>