நாகை அருகே நடுக்கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைப்பு: பவளப்பாறை பணிகளை நடுக்கடலில் துவக்கி வைத்தார் ஆட்சியர்

நாகப்பட்டினம்: நாகையில் கடல் உயிரினங்களை பாதுகாக்கும் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாகப்பட்டினத்தில் கஜா புயலின் போது பவளப்பாறைகள் கடுமையாக சேதமடைந்தன. ஆனால் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், இனப்பெருக்கத்தலமாகவும், பவளப்பாறைகளே உள்ளன. இதனால் நாகை அருகே நடுக்கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

பூம்புகாரில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கை பவளப்பாறைகளை நடுக்கடலில் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியா படகு மூலம் கொண்டுவரப்பட்ட முக்கோண மற்றும் உருளை வடிவ செயற்கை பவளப்பாறைகள் ரோப் கருவி மூலம் கடலில் இறக்கி விடப்பட்டன. இதனிடையே நாகை மாவட்டத்தில் 9 இடங்களில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணிகள் வருகிற 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Related Stories: