தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்பி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்: இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக வலியுறுத்தல்

சென்னை: திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் ஆகியோர் நேற்று டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையர்களை நேரில் சந்தித்து தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று மனு அளித்தனர். சந்திப்புக்கு பின்னர் டி.ஆர்.பாலு அளித்த பேட்டி: தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை நடத்தக்கோரி, கடந்த ஜூன் 16ம் தேதி மனு அளித்து இருந்தோம். அவற்றை நினைவூட்டும் விதமாக மீண்டும் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். மிக விரைவில் தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும். அதற்கான சாத்திய கூறுகள் உள்ளது.  திமுகவுக்கு அனைத்து இடங்களும் கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினாலே தனித்தனியாக தேர்தலை நடத்த வலியுறுத்துகிறோம். குஜராத்தில் நடத்தப்பட்டது போல தனித்தனியே தேர்தலை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>