ரூ.1.83 கோடியில் 75வது சுதந்திரதின நினைவுத்தூண்

சென்னை: ரூ.1.83 கோடியில், 75வது சுதந்திரதின நினைவுத்தூண் அமைக்கும் பணிக்கு பொதுப்பணித்துறை டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திரதினம் வைர விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சுதந்திர தின நினைவுத்தூண் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் அருகேயும், போர் நினைவு சின்னத்தில் இருந்து 500 அடி இடைவெளியில் ராஜாஜி சாலையில் உள்ள ஒரு இடமும், அண்ணாசாலையில் ஒரு இடமும், ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த 4 இடங்களில் ஒரு இடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்கிறார். அந்த இடத்தில் நினைவுத்தூண் அமைக்கப்படுகிறது. இப்பணிகளை மேற்கொள்ள வசதியாக ரூ.1.83 கோடியை பொதுப்பணித்துறையின் பராமரிப்பு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிக்காக சென்னை மண்டல கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி கடந்த 26ம் தேதி டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்பணியை ஒரு மாதத்தில் முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories:

>